கோவை மாநகர காவல் சரகத்திற்கு உதவும் வகையில் PSG கல்வி நிறுவனங்களின் நிர்வாக அரங்காவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் GRD கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் நந்தினி ரங்கசாமி இணைந்து அதிகத்திறன் வாய்ந்த Drone Camera ஒன்றினை கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் IPS., அவர்களிடம் வழங்கினார்கள். இந்த Drone Camera அதிகத்திறன் வாய்ந்ததாகவும், இரவு நேரங்களிலும் கண்காணிக்கக் கூடிய வகையில் (Night vision) கேமரா பொருத்தப்பட்டும் மற்றும் நான்கு கிலோமீட்டர் தொலைவு வரை சென்று படம் பிடிக்க கூடிய தொழில்நுட்பம் கொண்டதாகும்.இதன் மூலம் முக்கிய ஆர்பாட்டம், போராட்டம் மற்றும் பண்டிகை காலங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், கண்காணிக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும் ஏதுவாக இருக்கும் என காவல் ஆணையர் சுமித்சரண் IPS., தெரிவித்தார்.