காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரிலான “போதை தடுப்புக்கான நடவடிக்கையின் “(DAD – DRIVE AGAINST DRUGS )” தொடர்ச்சியாக அடையாறு மாவட்ட காவல் துணை ஆணையாளர் திரு.வி.விக்ரமன்,இ.கா.ப., அவர்களின் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் மனோஜ்குமார், செல்வகுமார், தலைமைக் காவலர் வெங்கடேசன், முதல்நிலைக் காவலர்கள் சங்கர், சண்முகம் மற்றும் பூர்ணகுமார் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், 30.1.2021 அன்று காலை, முட்டுக்காடு, சோதனைசாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, சந்தேகப்படும்படி வந்த 5 சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் பெருமளவு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த முத்துக்குமார், செல்வராஜ், அம்ஜித், ராஜகுருதி, பட்டுராஜா ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 12 டன் எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பான்மசாலா பாக்கெட்டுகள், 2 கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் 3 இலகுரக சரக்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் 01.02.2021 அன்று நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கினார்.