திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் கே சி பட்டி ஊராட்சிக்குட்பட்ட கள்ளக் கிணறு கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
கொடைக்கானல் மாவட்ட சார் ஆட்சியர் திரு. சிவகுரு பிரபாகரன் அவர்கள் இதை கேள்விப்பட்டு நேரடியாக விசாரணைக்கு சென்றார். அப்போது அந்த கிராம மக்கள் 100 ஆண்டு காலமாக இந்த கிராமத்தில் வசித்து வருகிறோம். யாரும் எங்களுக்கு எந்த விதமான உதவியும் செய்யவில்லை எங்கள் ஊருக்கு பாதை அமைத்துத் தருமாறு சார் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
உடனடியாக சார் ஆட்சியர் மாவட்ட ஆட்சியரிடம் பேசி இரும்பு நடைபாதை அமைத்து அந்த கிராம மக்களுக்கு பட்டா இல்லாதவருக்கு அனைவருக்கும் பட்டா வாங்கி கொடுத்து. இன்று23.02.2021 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி மூ.விஜயலட்சுமி அவர்கள் முன்னிலையில் கொடைக்கானல் சார் ஆட்சியர் திரு சிவகுரு பிரபாகரன் அவர்கள் தலைமையில். திட்ட இயக்குனர் திருமதி கவிதா. வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி விஜயா சந்திரிகா மற்றும் ஏழுமலையான் ரோடு இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்று இந்தப் பாலம் இன்று சிறப்பாக திறக்கப்பட்டது. கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.