சென்னை:
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியலில் காலடி எடுத்துவைக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் முடிவு செய்துள்ளார். அதற்கான அறிவிப்பை சென்னை ஆதம்பாக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 6 மணிக்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் வெளியிட்டார். மக்கள் பாதை மற்றும் சமூக ஆர்வலர் பொதுமக்கள் ஊடகத்துறையினர் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோது, கிரானைட் முறைகேட்டை வெளியே கொண்டுவந்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், நேர்மையான அதிகாரி என்று மக்கள் மனதில் இடம்பிடித்தார்.