கணவனை இழந்து 3 குழந்தைகளுடன் வசித்துவந்த ஒரு ஏழைத்தாய் நோயுற்ற நிலையில் கவனிப்பாரற்று இருந்த நிலையில் நடந்ததை அறிந்து தன்னார்வலர் மரியாதைக்குரிய திரு பக்ருதீன் அவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்த தகவல் அறிந்து பட்டுக்கோட்டை ரெட்கிராஸ் மூலம் சேர்மன் சுவாமிநாதன், சிவ.நாடிமுத்து, சூரியவர்மன் மற்றும் தன்னார்வலர்கள் அங்கே சென்றோம். அப்போது பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அவர்கள், வட்டாட்சியர் அவர்களும் வருகை புரிந்து மிகுந்த மன நெகிழ்ச்சியுடன் அந்த நோயுற்ற பெண்மணிக்கு சார் ஆட்சியர், வட்டாட்சியர் அவர்களும் ஆறுதல் கூறியதோடு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.
மேலும் அந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசின் மூலமாக வழங்க ஆவன செய்வதாக உறுதி அளித்தார்கள். குழந்தைக்கு புத்தாடைகள் பழங்கள் வட்டாட்சியர் அவர்கள் வழங்கினார்கள். நீண்ட நாட்களாக விண்ணப்பித்திருந்த ரேஷன் கார்டு உடனடியாக வட்டாட்சியர் அவர்களால் விசாரிக்கப்பட்டு அப்போதே அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. கணவனை இழந்த பெண்களுக்கான உதவித்தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்யப்பட்டது.