சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” தொடர்ச்சியாக, புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் திருமதி.ராஜலஷ்மி மற்றும் அசோக்நகர் உதவி ஆணையாளர் மேற்பார்வையில், R-10 எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் எம்.ஜி.ஆர்.நகர் நகர் மற்றும் நெசப்பாக்கம் சந்திப்பு அருகே கண்காணித்தபோது காரில் பெருமளவு கஞ்சா கடத்தி வந்த சேதுராமன், மற்றும் சுரேஷ்குமார் ஆகிய 2 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 220 கிலோ எடை கொண்ட கஞ்சா, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய கார், 2 செல்போன்கள் மற்றும் ரூ.500/- கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.