சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் ‘ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம்‘ எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் உ.சகாயம் தனது மனைவி விமலாவுடன் கலந்து கொண்டார்.
மாநிலத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே அதிகாரம் இருந்தால்தான் அதை செய்ய முடியும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்கிறேன். அரசியல் களம் காண்போம் என்பதை ஆமோதிக்கிறேன் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கூறினார்.
மேலும் ‘அதேவேளை எனக்கு ஒரு கோரிக்கை உண்டு. காமராஜர், கக்கன், அண்ணா ஆகிய தலைவர்கள் போல நேர்மையாகவும், எளிமையாகவும் இருந்தால் சாதி, மத வேறுபாடுகளை உடைத்தெறிக்கும் லட்சியவாதியாக இருந்தால், வாழ்நாள் முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவையாற்றிட வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் இருந்தால், நாம் அரசியல் களம் காண்போம். சுயநலத்துடன் பணியாற்றக்கூடாது. மற்ற கட்சிகள் போல வெடி கலாசாரம், தூதிப்பாடல் கூடாது.
லட்சியமே முக்கியமாக, கொள்கை உணர்வோடு புதிய சமுதாயம் அமைத்திட நீங்கள் புறப்பட்டால், அதற்கு நான் வலதுகரமாக இருந்து துணை நிற்பேன்’ என்று கூறினார்.