முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கொரோனா தொற்று காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான ‘சகாயம் அரசியல் பேரவை’ 20 தொகுதிகளில் போட்டியிட்டது. வேட்பாளர்களுக்கு ஆதரவாக சகாயம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டது. இதனால் சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சகாயம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிப்பப்பட்டு வருகின்றது.