தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சி கிராமத்தில் பாரத பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் 2016 முதல் 2018 வரை கட்டப்பட்ட வீடுகள் தொடர்பான RTI ல் கோரிருந்த தகவல்களுக்கு பொதுதகவல் அலுவலர் வழங்கியுள்ள பதிலானது வெவ்வேறு முரண்பட்ட தகவலாக உள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்று இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. அரசின் நிதி மக்களுக்கு முறையாக சென்றடைவதில்லை. மாவட்ட நிர்வாகம் முறைகேட்டில் ஈடுப்பட்ட அதிகாரிகள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.