தஞ்சை மாவட்டம் பேராவூரணியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்ரீ கந்தசாமி ஊரக வளர்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த 2011ம் ஆண்டு முதல் பல்வேறு சமூசேவைகள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
அதன் நிறுவனர் சமூக சேவகர் களத்தூர் க.நீலகண்டன் அவர்கள் தற்பொழுது இந்த கொரோனா பொது முடக்க காலத்தில் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு என்ற சொல்லுக்கேற்ற செயலாய் சென்னை எம்எம்டிஏ பகுதியில் போதகர் சைமன், சகோதரி ஜீலி, வழக்கறிஞர் இரமேஷ் அவர்கள் ஒருங்கிணைப்பில் நண்பர்களுடன் சேர்ந்து தினமும் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு சமைத்து எம்எம்டிஏ முதல் மாதவரம் பைபாஸ் வரை உள்ள சாலையோரம் மற்றும் ஆதரவற்று வாழும் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு பொட்டலம், தண்ணீர் பாட்டில் மற்றும் முககவசத்தை தேடிச்சென்று வழங்கி வருகின்றனர்.