தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு தளர்வு இல்லா ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளது.
மது போதைக்கு அடிமையானவர்கள் மருந்து கடைகளில் போதைக்கு உள்ள மருந்துகளை பயன்படுத்துவதால் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் அவர்களுக்கு தகவல் வந்ததன் பேரில் அனைத்து மருந்து கடை உரிமையாளர்களையும் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் அனைத்துக் மருந்து கடை உரிமையாளர்களிடம் மருந்து வாங்க வருபவரிடம் முறையான மருந்துச் சீட்டு இருக்கிறதா? என்று பரிசோதித்து மருந்து கொடுக்குமாறு அறிவுறுத்தினார். சந்தேகத்திற்கு இடமாக யார் வந்தாலும் காவல்துறைக்கு தகவல் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பேராவூரணி பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் சேதுபவாசத்திரம், மதுக்கூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மருந்து கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.