திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை அழைத்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் பாராட்டி வெகுமதியளித்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம், துவாக்குடி காவல் நிலையத்தை சேர்ந்த ஆய்வாளர் திருமதி. பாரதி, உதவி ஆய்வாளர் திரு. முத்துசாமி , காவலர் திரு. நிர்மல்குமார் ஆகியோர் இரவு ரோந்தின் போது சிறப்பாக செயல்பட்டு பெல் நகரில் உள்ள மதுபானக் கடையில் நடக்கயிருந்த கொள்ளையில் ஈடுபடவந்த எதிரிகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்ததர்க்காகவும் மற்றும் புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மாவட்டங்களிள் பெண் காவலர்கள் திருமதி. ரேணுகா மற்றும் திருமதி. இளவரசி ஆகியோர் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுத்து வீரமாக செயல்ப்பட்டு எதிரிகளை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தமைக்காகவும் மேற்படி காவல் ஆளினர்களின் சிறந்த பணியை பாராட்டி இன்று 17.06.2021 தேதி திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் வெகுமதியளித்தார்.