தென்னங்குடி வடக்கு கிராமத்தில் உள்ள நீச்சத்திகுளத்தில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர் IAS அவர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தென்னங்குடி வடக்கு கிராம இளைஞர்களால் தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இளைஞர்கள் நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும், தெரிந்தவர்களிடம் நன்கொடை வசூல் செய்தும் மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர். அந்த இளைஞர்களின் செயல் மிகவும் பாராட்டுதலுக்குரியது. இப்பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் நமது ஞிஸி கிறியி அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழு சார்பாக மிக்க நன்றி.