சென்னை பெருநகர காவல் கூடுதல் காவல் ஆணையர் தெற்கு அவர்களின் உத்தரவுப்படி கிழக்கு மண்டல இணைஆணையர் ராஜேந்திரன் இ.கா.ப. திருவல்லிக்கேணி மாவட்ட துணை ஆணையர் பகலவன் இ.கா.ப. அறிவுரையின்படி அண்ணா சதுக்கம் காவல்நிலைய உள்ள கடற்கரை பகுதியில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காரணமாக காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே மெரினா கடற்கரை பகுதியில் பொதுமக்கள் நடை பயிற்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவாமலிருக்க 1.7.2021 அன்று காலை ஆய்வாளர் கண்ணன் தலைமையில் குழுமமாக செல்பவர்கள் கூட்டமாக நிற்பவர்களை டிரோன் மூலம் கண்காணிப்பு செய்து மெகா போன் மூலமாக கூடாமல் இருக்க காவல் அதிகாரிகள் ஆளிநர்கள் மூலம் அறிவுரை வழங்கி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதியில் தங்கியிருந்த ஏழைகளுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது. உதவி ஆணையர் திருவல்லிக்கேணி சரகம் எம்.எஸ்.பாஸ்கர் உடன் இருந்தார்.