R.ரமணி ராஜ், விவேக் ரகுநாதன், ஜெயபிரகாஷ் நாராயணன் இவர்கள் மூவரும் சிறுவயதினில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக கல்வி பயின்றவர்கள். இவர்கள் மூவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். தற்போது இவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஏதாவது ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்ய வேண்டும் என்று மூவரும் முடிவு செய்து, ஒரு மாணவியின் டாக்டர் படிப்பிற்கான கல்வி செலவை ஏற்று படிக்க வைக்கிறார்கள்.
ரமணிராஜ் என்பவர் 21 எழை மாணவர்களுக்கு 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான கல்வி செலவை ஏற்று படிக்க வைக்கிறார். தனியார் நிறுவனத்தில் 2 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பணியை வேண்டாம் என்று, தனது சொந்த ஊரில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்டு, தலைவர் பதவியில் தற்போது இருந்து வருகிறார். மக்களுக்கு பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
விவேக் ரகுநாதன் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நெப்பத்தூர் என்னும் கிராமத்தில் ரகுநாதன் மற்றும் ருக்மணி தம்பதியருக்கு ஒரே மகனாக பிறந்தார். ரகுநாதன் கிராம நிர்வாக அலுவலராகவும், ருக்மணி கிளை தபால் அலுவலராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் இருவரும் நெப்பத்தூர் மற்றும் அருகாமை கிராமங்களில் உள்ள ஆரம்ப கல்வி நிலையங்கள், கோவில்கள் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திருமதி ருக்மணி அவர்கள் பிராணிகள் வதை தடுப்பு மற்றும் புனர்வாழ்வு மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
மிகச் சாதாரண பின்புலத்திலிருந்து வந்திருந்தாலும், தனது தந்தை மற்றும் தாயின் அடிதொற்றி, எளிய மற்றும் வரியவர்களுக்கு உதவி செய்வதை தன் வாழ்நாள் கடமையாகவே செய்து வருகிறார். 2011- ஆம் ஆண்டு முதல் தனது வருவாயில் 20 சதவிகிதத்தை சமுதாய முன்னேற்றத்திற்காக செலவழிப்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
இதுவரை 10-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வி செலவினங்களை ஏற்றுள்ளார். சமீபத்தில் நெப்பத்தூர் மீனாட்சி உதவி பெறும் தொடக்க பள்ளிக்கு, அருகாமை கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் வந்து செல்ல வசதியாக 2.5 லட்சம் மதிப்புள்ள ஒரு மின்-ஆட்டோ வண்டி ஒன்றையும் பரிசளித்துள்ளார். தான் பிறந்த ஊரில், ஊர் மக்களுக்கு பயனளிக்கும் விதமாக தனது தாத்தா நினைவாக 35 லட்சம் ரூபாய் பொருட்செலவில், skill development center ஒன்றை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். ஒரு பூங்கா, நூலகம், மற்றும் ஒரே நேரத்தில் 20 நபர்கள் பயிற்சி பெரும் வகையில் இணைய வசதியுள்ள ஒரு நிலையமாக இது செயல்படும்.
Basic computer and internet knowledge, internet services, SEO, மற்றும் இடை தரகர்கள் இல்லாமல் இணைய வழியில் நேரடி வர்த்தகம் செய்யும் முறைகளை பயிற்றுவிக்கும் நிலையமாக இது செயல்படும். நெப்பத்தூர் மற்றும் அதன் அருகாமை கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் மாணவர்கள் இதன் மூலம் உடனடி பலன் அடைய முடியும். தனது தாய் வழி தாத்தா திரு ராஜகோபாலன் நினைவாக, இவரது தாய் மாமா திரு பாலாஜி ராஜகோபாலன் அவர்களால் தொடங்கப்பட்ட Soni Group of Companies இலும் இணைந்து சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல நற்காரியங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயபிரகாஷ் நாராயணன் ஒரு ஏழை மாணவியின் டிகிரி படிப்பிற்கு உதவி செய்து அந்த பெண் டிகிரி முடித்து ஒரு நல்ல நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் பட்டுக்கோட்டை பகுதியில் 2 மாணவர்களுக்கு, சீர்காழியில் 2 மாணவர்களுக்கும் 2020 – 2021ம் ஆண்டிற்கான கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். நீதியின் நுண்ணறிவு இதழின் நிருபராக உள்ளார்.
ஏழை மாணவர்களுக்கு உதவும் மூவருக்கும் நீதியின் நுண்ணறிவு சார்பில் வாழ்த்துக்கள்.