பட்டா மாறுதல் கோரும் புல எண்ணில் புதிதாக 5 மரக்கன்றுகள் நட்டு அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால் விண்ணப்பம் முதுநிலை வரிசையின்படி அல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார் கரூர் மண்டல துணை வட்டாட்சியர் மோகன்ராஜ்.
மேலும் தனது இருக்கைக்குப் பின்னே என் கையொப்பம் விலைமதிக்க முடியாதது விலை பேசாதீர் என்று எழுதி வைத்துள்ளது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. அவருக்கு நீதியின் நுண்ணறிவு இதழின் சார்பில் வாழ்த்துக்கள்..!