சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாக, ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக, அடையார் மாவட்ட காவல் துணை ஆணையாளர் மகேந்திரன் IPS உத்தரவின் பேரிலும், கிண்டி சரக உதவி ஆணையாளர் புகழ்வேந்தன் மேற்பார்வையில் ஜே7 வேளச்சேரி காவல்ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஜெகநாதன், அருண், மகேஸ்வரன், மணிகண்டன், எபன் கிருஷ்டோபர், பானுமதி, தீபா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, 28.08.2021 அன்று மாலை, வேளச்சேரி, சீனிவாசா நகர், ராம்நகர் விரிவாக்கம், ஐஸ்வர்யா பிளாட், எண்.228 என்ற முகவரியிலுள்ள வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில் பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டு, பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய பார்த்திபன், மோகன், சசிகுமார், ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். மேலும், மேற்படி வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 4 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.