தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005 ன் படி இச்சட்டம் நடைமுறைக்கு வந்து 120 நாட்களில் அரசு அலுவலகங்கள் தானாக முன்வந்து வழங்க கூடிய தகவல்களை பிரிவு 4(1)(b) ன் கீழ் இணையத்தில் வெளியிடபட வேண்டும் என்பதாகும்.
மாண்புமிகு பாரத பிரதமர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் கூட பிரிவு 4(1)(b)யின் படி தானாக முன்வந்து தகவல்களை வெளியீட்டுள்ளனர் என்பது பாராட்டுதலுக்குரிய செயல் ஆகும். ஆனால் தமிழ்நாட்டில் 99% பெரும்பாலான அரசு அலுவலகங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மதித்து பிரிவு 4(1)(b) ல் தானாக முன்வந்து வெளியிட முன்வர வில்லை என்பதை நிதர்சனமான உண்மை.
ஊழல் கட்டுப்படுத்த பட மற்றும் அரசு நிர்வாகம் வெளிப்படையாக செயல்பட பிரிவு 4(1)(b) மிக அவசியம். ஆணையத்திற்கு கேட்கப்பட்ட கேள்வி விபரம்: தமிழ்நாடு தகவல் ஆணையம் 2006 முதல் 12/04/2021 வரையில் பிரிவு 18(1)ன் கீழ் வரபெற்ற புகார் மனுக்களில், புகார் பிரிவின் படி வழக்கு பதிந்தது அடிப்படையில், ஒரு பொதுதகவல் அலுவலராவது பிரிவு 20(1) & 20(2)ன் படி தண்டிக்கப்பட்டுள்ளனரா? என்பதை உறுதி செய்து தகவலை வழக்கு எண் விபரத்துடன் தகவல் வழங்க கேட்டுருந்தேன்.
பதில்: தொகுத்து வைக்கப்பட வில்லை, ஆணையத்தின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். என்ற பதிலை தமிழ்நாடு தகவல் ஆணைய பொதுதகவல் அலுவலர் வி.மீனா (05-07-2021) வழங்கியுள்ளார்.
வெளிப்படை தன்மைக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டிய ஆணையத்தின் பொதுதகவல் அலுவலரே வெளிப்படை தன்மையுடன் பதில் வழங்க மறுத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
பிரிவு 18(1)-ன் வழக்கு பதிந்து ஒரு பொதுதகவல் அலுவலர் கூட பதினைந்து ஆண்டுகளில் தண்டிக்கபடவில்லையா? ஆண்டு அறிக்கையில் எவ்வாறு புகார் மனுக்களின் எண்ணிக்கையை ஆணையம் கணக்கீடு செய்து வெளியீடுகிறது முரண்பாடு தெரிகிறது. பிரிவு 18-ன் புகார் பிரிவின் படி பொதுதகவல் அலுவலர் முறையாக விசாரணை செய்து தண்டிக்கப்பட்டால் தமிழ்நாடு வெளிப்படைதன்மையில் No.1 மாநிலமாக மாறிவிடும் என்பதை என்னுடைய கருத்து.