சென்னை, மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இராமச்சந்திரன், என்பவர் 31.08.2021 அன்று மதியம் வீட்டிலிருந்த போது, அங்கு வந்த கும்பல் முன்விரோதம் காரணமாக, இராமச்சந்திரனை கத்தியால் தாக்கியுள்ளனர், படுகாயமடைந்த இராமச்சந்திரன் சம்பவயிடத்திலேயே இறந்து விட்டார். மேற்படி சம்பவம் குறித்து இராமச்சந்திரனின் தாயார் சுந்தரி S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையர் பிராங் டி ரூபன் உத்தரவின்பேரில் S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான உதவி ஆய்வாளர்கள் முத்துசாமி, மணிமாறன், பழனி, நிர்மல், காவலர்கள் ரகு, விஜயகாந்த், கார்த்திக், ராமலிங்கம் ஆகியோர் கொண்ட இருதனிப்படைகளாக பிரிந்து விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தொண்டை அப்புனு (எ) வசந்தகுமார், குமரன் (எ) கோச், சுரேஷ்கண்ணா (எ) ஜிம், சிவா, பப்புலு (எ) சண்முகம், பிரகாஷ், ஆறு (எ) ஆறுமுகம், அரவிந்தன், பிரசாந்த், ஆகிய 9 நபர்களை கைது செய்தனர். மேற்படி எதிரிகளிடமிருந்து 1 ஆட்டோ, 1 இருசக்கர வாகனம் மற்றும் 9 கத்திகள் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.