தாட்கோ மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய்.7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான தொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்படுகிறது எந்த தொழிலுக்கும் விண்ணப்பிக்கலாம்.
இண்டர்நெட் மூலமாக விண்ணப்பிக்க சொல்லியிருப்பதால் பெரும்பான்மையான SC/ST மக்களுக்கு இந்த செய்தி போய் சேரவில்லை எனவும் விண்ணப்பித்தலில் வழிமுறை தெரியவில்லை என்பதாலும் தகுதியுடைய பலர் விண்ணப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர் அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி என்று ஏதுமில்லை எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
அரசு நமக்கென்று ஒதுக்கும் பணத்தை எல்லோருக்குமான பொது திட்டங்களுக்கு திருப்பி விடுவதாக நிறைய புகார்கள் வருவதை நினைவில் கொண்டு தாட்கோவுக்கு ஒதுக்கப்படும் நிதியை கொஞ்சம்கூட மீதிவைக்காமல் அனைவரும் விண்ணப்பித்து கடைசிவரை முயற்சிசெய்து பயனடையுங்கள்.எனவே தகுதியுள்ள அனைத்து SC/ST மக்களும் விண்ணப்பித்து பலனை அடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. கீழுள்ள தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
http://application.tahdco.com/
தேவையான ஆவணங்கள்:
- குடும்ப அட்டை
- போட்டோ
- ஆதார் எண்
- வாக்காளர் அட்டை
- சாதி சான்றிதழ்
- வருமான சான்று-ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல்
- கல்வி சான்று (படிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம்)
- டிரைவிங் லைசென்ஸ் & பேட்ஜ்
(வாகன கடனுக்கு மட்டும்) - கோட்டேஷன் (டின் நம்பர் வைத்துள்ளவரிடம் மட்டுமே கோட்டேஷன் வாங்க வேண்டும்)
- திட்ட அறிக்கை (ஒரு ஆடிட்டரிடம் பெற வேண்டும்)