திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கோ.சசாங் சாய் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி விபத்துக்களை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக காங்கேயம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் முத்தூர் ரோடு ஜங்ஷன் அருகே வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் மற்றும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள்.