சென்னை பெருநகர காவல்துறையில், பெண்கள் உதவி மையம் எண்.1091, முதியோர் உதவி மையம் எண்.1253 மற்றும் குழந்தைகள் உதவி மையம் 1098 ஆகியவை செயல்பட்டுக் கொண்டு, பெண்கள் மற்றும் முதியோர் குறித்து வரும் உதவி அழைப்புகளுக்கு காவல் குழுவினர் மற்றும் காவல் உதவி மையத்தில் அங்கம் வகிக்கும் அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வ தொண்டு அமைப்பினருடன் (NGO) ஒருங்கிணைந்து செயல்பட்டு, மீட்பு பணியில் ஈடுபட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மேலும், சென்னை பெருநகர காவல் துறையில் கடந்த 21.04.2021 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களால் “காவல் கரங்கள்” என்ற அமைப்பு தொடங்கப்பட்டு, சென்னை பெருநகரில் ஆதரவில்லாமல் சுற்றி திரியும் மனநிலை மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள், பெண்கள், மற்றும் குழந்தைகளையும் கண்டறிந்து உரிய பாதுகாப்புடன் அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வ தொண்டு அமைப்பினர் (ழிநிளிs) மூலம் மீட்டு தேவைபடுவோருக்கு சிகிச்சை அளித்தும் அரசு மற்றும் தனியார் இல்லங்களில் தங்க வைத்தும், நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக. ஸ்ரீராம் குழுமத்தினர் மற்றும் அதுல்யா நிறுவனத்தினர் முதியோர் நலன் மற்றும் பராமரிப்புக்கு, சென்னை பெருநகர காவல்துறை உதவி மையத்தில், 2004ம் ஆண்டு முதல் அங்கம் வகித்து, காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் Help Age India என்ற முதியோர் நல அமைப்பினருக்கு (Elders Help) பொருளாதார ரீதியாக உதவ முன்வந்தனர்.
அதன்பேரில், ஸ்ரீராம் குழுமத்தினர் மற்றும் அதுல்யா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திக் நாராயணன் இணைந்து வழங்கிய ரூ.4,50,000/- க்கான காசோலைகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள்) Help Age India அமைப்பின் தமிழகத்தின் இயக்குநர் திரு வி.சிவகுமார் என்பவரிடம் வழங்கினார். உடன் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் ஜெ.லோகநாதன்,இ.கா.ப., காவல் உதவி மைய பொறுப்பு காவல் ஆய்வாளர் மற்றும் அதுல்யா நிறுவனத்தின் பெண் நிர்வாகிகள் உடனிருந்தனர்.