J-7 வேளச்சேரி காவல்நிலைய ஆய்வாளர் திரு.சண்முகசுந்தரம் தலைமையிலான காவல் குழுவினர் வேளச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏ.ஜி.எஸ்காலனி, சொக்கலிங்கம்நகர் பகுதியில் 3 அடிக்கும் மேல் மழைநீர் வீட்டிற்குள்ளும், வீட்டை சுற்றியும் சூழ்ந்த நிலையில், வீட்டின் முதல் தளத்தில் தவித்து கொண்டிருந்த 9 மாதகர்ப்பிணி பெண் ஜெயந்தி, என்பவரை படகு மூலம் மீட்டு அவரது உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். மேலும் அப்பகுதியில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்த 50க்கும் மேற்பட்ட நபர்களை ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் படகு மூலம் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.