தமிழகத்தில் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கடந்த வாரம் வீடுதோறும் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடனும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழகம் முழுவதும் நாளை முதல் சனிக்கிழமை வரை வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். மேலும், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (21ம் தேதி) 9ஆம் கட்ட தடுப்பூசி முகாமானது 50,000 இடங்களில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இதுவரை 73 சதவீத மக்களுக்கு முதல் தவணையும், 35 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.