படைத்தவன் பழக்கிய படைவீரன்
பகைவனை பதம்பார்க்க பணித்தவன்
காயங்களை கண்டாலும் கலங்காதவன்
கடமையில் கர்வத்தை கணித்தவன்
தாக்குவதிலும் தாங்குவதிலும் தலைசிறந்தவன்
தன்னுயிரிட்டாலும் தாயகத்தை தாங்கிடுவான்
பறந்து பதுங்கி பாய்ந்திடுவான்
பசிக்கும் பாசத்திற்கும்
பணியாதவன்
இரவுபகல் இமைமூடாத இராணுவவீரன்
இட்டபணியில் இணைந்திருப்பான் இந்தியவீரன்
மடிவதையும் மகிழ்வதையும் மதிக்காதவன்
மாவீரனாய் மலையினுள் மறைந்திருப்பவன்
ஆயுதமேந்தி அந்நியர்களை அழித்திடுவான் ஆதவனும் அவனிடத்தில அஞ்சிடுவான்
எல்லையிலே எல்லையில்லா ஏவல்பணி
எதிர்த்து எழுவதில் எல்லையில்லாதவன்நீ
பாரதத்தின் பழமைகளை பாதுகாப்பவனாய்
பணியிலே பலியானாலும்
பாரதசின்னமனாய்
சி சுபாஷ் சந்திர போஸ்
படைத்தவன் பழக்கிய படைவீரன்
பகைவனை பதம்பார்க்க பணித்தவன்
காயங்களை கண்டாலும் கலங்காதவன்
கடமையில் கர்வத்தை கணித்தவன்
தாக்குவதிலும் தாங்குவதிலும் தலைசிறந்தவன்
தன்னுயிரிட்டாலும் தாயகத்தை தாங்கிடுவான்
பறந்து பதுங்கி பாய்ந்திடுவான்
பசிக்கும் பாசத்திற்கும்
பணியாதவன்
இரவுபகல் இமைமூடாத இராணுவவீரன்
இட்டபணியில் இணைந்திருப்பான் இந்தியவீரன்
மடிவதையும் மகிழ்வதையும் மதிக்காதவன்
மாவீரனாய் மலையினுள் மறைந்திருப்பவன்
ஆயுதமேந்தி அந்நியர்களை அழித்திடுவான் ஆதவனும் அவனிடத்தில அஞ்சிடுவான்
எல்லையிலே எல்லையில்லா ஏவல்பணி
எதிர்த்து எழுவதில் எல்லையில்லாதவன்நீ
பாரதத்தின் பழமைகளை பாதுகாப்பவனாய்
பணியிலே பலியானாலும்
பாரதசின்னமனாய்
சி சுபாஷ் சந்திர போஸ்