ஆம், நண்பர்களே…
வாசிப்பை நேசித்து அமெரிக்க அதிபராக வாழ்வில் உயர்ந்த ஆபிரகாம் லிங்கன் அவர்களை பற்றிய தகவல்கள் பின்வருமாறு…
வாழ்வில் சாதித்த சரித்திரம் படைத்த சரித்திரத்தில் நிலைத்த வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதனையாளர்கள் அனைவருக்குமே ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உண்டு அது என்னவென்றால் அனைவருமே வாசிப்பை நேசித்து, வாசிப்பை சுவாசித்து, வாசிப்பை தனது உயிர் மூச்சாக கடைப்பிடித்த மனிதர்களாக இருக்கிறார்கள்.!
அவர்களது வரலாற்றை நாம் புரட்டிப் பார்க்கும்போது, வரலாற்றை படிக்கும் பொழுது அனைவருமே அவரவர் வாழ்வில் மென்மேலும் உயர்ந்து இருக்கிறார்கள் அதற்கு முழுமுதற் காரணம் என்னவென்று பார்த்தால் எல்லா துறையிலும் சாதித்த சாதனை நாயகர்கள் அனைவரும் வாசிப்பை நேசிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.
கடினமான தருணங்களை, கஷ்டமான காலங்களை, மிக கவனமாக கடந்து, கட்சிதமாக கையாண்டு காலத்தை வென்றார்கள்,
மிக முக்கியமாக படிப்பை படிக்கல்லாக்கி பிறர் புருவம் உயரும் அளவிற்கு வாழ்வில் உயர்ந்தார்கள்.
தனது தன்னம்பிக்கையால், விடாமுயற்சியால், கடின உழைப்பால், தனது லட்சியத்தை நோக்கி உறுதியான பயணத்தை மேற்கொண்டார்கள், ஆடு மாடு போல சராசரியாக உண்டு உறங்கி வேடிக்கை மனிதர்கள் போல வாழாமல் கொள்கை கோட்பாடு கொண்டு மனவுறுதியோடு போராடி வைராக்கியம் கொண்டு வாழ்ந்து இருக்கிறார்கள்.
அப்படி வாழ்ந்ததனால்தான் அவர்கள் அனைவருமே வான்நோக்கி வளர்ந்து இருக்கிறார்கள்.வானத்தை தன்வசப்படுத்தி இருக்கிறார்கள் இந்த சமூக மேன்மைக்காக தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்திருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மையாகும்.!
வீட்டுக்கு வெளிச்சம் தருவது சாளரம் புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது.
சாரளம் இல்லாத வீடு போல, வெளிச்சத்தை பார்க்காத சத்திரம் போல இன்றைய நாட்டு மக்களின் நிலையானது அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது, பண்பாடு அற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று அறவே இல்லாமல், பாழாய் போய் மீண்டும் எழவே முடியாத படுகுழியில் வீழ்ந்து கிடக்கிறார்கள். நம்மை ஏமாற்றாத ஒரு சிறந்த நண்பன் யார் என்று கேட்டால் அதற்கான பதில் புத்தகம் என்பதுதான்.
நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும், உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும், எண்ணங்கள் நேர் பெறும், நமது ஆற்றல் பன்மடங்கு பெருகும், திறமைகள் மிளிரும், உற்சாகம் ஊற்றெடுக்கும், சோர்வு அகலும், மனம் நிறைவு பெறும், தெளிவான துணிசலான முடிவுகள் எடுக்க புத்தகமானது நிச்சயம் துணைபுரியும் இட் சமூகமானது மதிக்கும்படி வணங்கும்படி போற்றும்படி புகழும்படி உங்கள் வாழ்க்கை மேம்படும்.
அடிமைகளின் சூரியன் எனப் போற்றப்பட்ட ஆபிரகாம் லிங்கன் அவர்கள் புத்தகங்களை படித்து படித்தே அமெரிக்க ஜனாதிபதி என்கிற வரலாற்று சிறப்புமிக்க மிக உயர்ந்த பதவிக்கு சென்றறார்,
அவர் ஒரு தச்சுத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். தனது தீவிரப் படிப்பினால் தேசம் புகழத் திகழ்ந்தார் அதற்கு காரணம் பல மைல்கள் கடந்து கால்நடையாக நடந்து “ஜார்ஜ் வாஷிங்டன் வரலாறு” என்னும் நூலை இரவல் வாங்கிப் படித்தார். அந்த நூல், அவர் மனதில், தான் எதிர்காலத்தில் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வர வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையை உருவாக்கியது. அந்த சிந்தனை, அவரை அமெரிக்காவின் அதிபராக உயர்த்தியது இது வரலாறு நமக்கு கூறும் செய்தியாகும்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு என்று அய்யன் திருவள்ளுவர் கூறியதை ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அதை நிரூபித்துக் காட்டினார்.
தடைகளை தகர்த்து தன்னம்பிக்கையால் தலைநிமிர்ந்து இடையூறுகளை இன்பமாக ஏற்று அவமானங்களை அத்திவாரமாக்கி அழியாத புகழுக்கு பெயருக்கு சொந்தக்காரர் ஆனார்.
மேலும் அவர் இரவல் வாங்கிச் சென்ற புத்தகமானது அடைமழையில் முழுதாக நனைந்து போனது அதற்கு அபராதம் செலுத்துவதற்காக புத்தகத்தை இரவல் கொடுத்தவர் தனது வயலில் வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் அப்படிப்பட்ட ஒரு கடினமான சூழலையும் மன மகிழ்ச்சியாக ஏற்றார்.
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்றார் பாண்டிய மன்னர் அதிவீர பாண்டியன் கற்பதற்காக ஒரு புத்தகத்தை விரும்பி படிப்பதற்காக தனது தன்மானத்தை பாராமல் அவமானத்தை அவமானமாக ஏற்காமல் அதை அலட்சியப்படுத்தி தனது லட்சியத்தை நிறைவேற்றினார் ஆபிரகாம் லிங்கன் அவர்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தொடர்ந்து பதினாறு முறை தோல்வி கண்டார் 17 – வது முறையாக களம் கண்டு வெற்றி வாகை சூடினார்.!!!
சிறுவயதில் தான் எண்ணியவாறு அமெரிக்க அதிபராக உயர்ந்தார் அடிமைப்பட்டுக் கிடந்த கருப்பின மக்களை அடிமை ஒழிப்பு சட்டம் இயற்றி அவர்களுக்கு அரண் அமைத்து ஒரு மிகச் சிறந்த அதிபர் என்பதை நிரூபித்தார்.
வாசிப்பை நேசிக்கும் பழக்கம் அவருக்கு இருந்ததால் மட்டுமே இன்று வரலாறு அவரை புகழ்கிறது, அடிமைகளின் சூரியன் என்ற பட்ட பெயருக்கு சொந்தக்காரர் ஆனார். எனவே இக்கட்டுரையை படிக்கும் நீங்களும் வாசிப்பை நேசிக்கும் பழக்கத்தை கடைபிடியுங்கள். நிச்சயம் ஆபிரகாம் லிங்கன் அவர்களைப்போல உங்களாலும் வாழ்வில் சாதிக்க முடியும்.. சரித்திரத்தில் நிலைக்க முடியும். வானத்தை வசப்படுத்த முடியும் என்று கூறி எனது கட்டுரையை நிறைவு செய்கிறேன் நன்றி வணக்கம்.
வாசிப்பு நேசிப்பு சுவாசிப்பு தொடரும்..
சமூகப்பற்றாளன் ஞானசித்தன்
செல்: 7598534851