தஞ்சாவூர் மாவட்ட நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.வே.பாலகிருஷ்ணன், இ.கா.ப., அவர்கள் வழக்கு கோப்புகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார். மேலும் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மரக்கன்று நட்டு சிறப்பித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.வே.பாலகிருஷ்ணன், இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு போது பணியின்போது உயிரிழந்த காவலர்களின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்திற்கு நல உதவிகள் வழங்கினார்.