சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், தி.நகர் துணை ஆணையாளர் திரு.ஹரிகிரன் பிரசாத், இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில், காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர், 05.01.2022 அன்று தி.நகர் காவல் மாவட்டத்தில் தி.நகர், பாண்டிபஜார், வடபழனி, விருகம்பாக்கம், இராயலாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், வேடமணிந்தும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி, பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினர்.