தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே ஆதனூர் கிராமத்தில் மாநிலம் தழுவிய மாபெரும் மின்னொளி கபடி திருவிழாவை ஆதனூர் இந்தியன் ரயில்வே கபடி வீரர் சின்னப்பன், தமிழ்நாடு மின்சார வாரிய தேசிய கபடி வீரர் சூசைராஜ்,போக்குவரத்துதுறை தேசிய கபடி வீரர் பாலு, மற்றும் ஆதனூர் கிராமத்தினர் இணைந்து கபடி திருவிழாவை ஜனவரி 1 மற்றும் 2 தேதிகளில் (சனி ஞாயிறு) நடத்தினர்.
இந்த கபடி போட்டிக்கு தஞ்சை அமெச்சூர் கபடி கழக தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார், தஞ்சை அமெச்சூர் கபடி கழக செயலாளர் இளவரசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, தொழில் அதிபர் ஜி.கே.குருசாமிகருப்பையா, அகில இந்திய முதியோர் ஓட்டப்பந்தய வீரர் எப்.ஆசீர்வாதம் தொழிலதிபர் எட்வின் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கபடி போட்டிக்கு முதல் பரிசாக ரூபாய் 30 ஆயிரம் பரிசு தொகையும் 7 அடி சுழல் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூபாய் 20 ஆயிரம் ரொக்கதொகையும், இரண்டாம் பரிசாக ரூபாய் 20 ஆயிரம் பரிசு தொகையும் 6அடி சுழல் கோப்பையும், மூன்றாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாய் ரொக்கதொகையும் 5 அடி சுழல் கோப்பையும், நாலாவது பரிசாக 10 ஆயிரம் ரொக்கதொகையும் 4 அடி சுழல் கோப்பையும், ஐந்தாவது பரிசாக 5 ஆயிரம் ரொக்க தொகையும் 3 அடி சுழல் கோப்பையும். ஆறுதல் பரிசாக ரூபாய் 5000 மும், சிறப்பு பரிசாக ரூபாய் 5000மும், தொடர் ஆட்டநாயகன் விருதாக ரூபாய் 5000மும், ஆட்டநாயகன் விருதாக 5000 மும் வழங்கினர்.
பல மாவட்டங்களிலிருந்து 40க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர். அமெச்சூர் கபடி கழகத்தின் மாநில நடுவர்கள் கபடி போட்டியை நடத்தினர். முதல் பரிசை ஒக்கநாடு மேலையூர் அணியினரும், இரண்டாவது பரிசு திருவாரூர் மாவட்டம் வடுவூர் அணியினரும், மூணாவது பரிசு அக்னிசிறகுகள் அறந்தாங்கி எல்.என்.புரம் அணியினரும், நான்காவது பரிசு திருச்சி அல்லித்துறை அணியினரும், ஐந்தாவது பரிசு ஆதனூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரும் தட்டிச் சென்றனர். கபடி போட்டி இன்டோர்செட் அமைத்து மேட் போடப்பட்டு கபடி நடத்தப்பட்டது.
விழாவில் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி. இளங்கோ, காங்கிரஸ் நெப்போலியன், ஷேக் இப்ராஹிம், தெட்சிணாமூர்த்தி, திமுக அப்துல் மஜீது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எஸ் பாண்டியராஜன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், முன்னாள் கவுன்சிலர் நீலகண்டன் மற்றும் ஆதனூர் கூப்புளிக்காடு, பழைய பேராவூரணி கிராமத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பால் ஜோசப் வரவேற்று பேசினார். விழா நிறைவில் சந்தியாகு நன்றி கூறி பேசினார்.
– Dr. வேத குஞ்சருளன்