கொரோனா ஆடிய ஆட்டத்தால் சலித்து போன ஆண்டு
கொட்டி தீர்த்த கனமழையும் மக்களை கட்டி போட்டது உண்டு
வருடம் முழுவதும் வரிசையில் கோவாக்சின் போட நின்று
வாழ்க்கை வாழ்ந்திட மருத்துவமனையில் காலத்தை கழித்த ஆண்டு
ஆக்ஜிசன் இல்லாது மக்களை திணறடித்து அலைய வைத்ததை கண்டு
அத்திவரதரும் எழுந்து வந்து காட்சி அளித்ததும் உண்டு
முடியும் நேரத்தில் ஓமைக்கிரானும் ஓடி வந்ததை கண்டு
முகமூடிதான் நிரந்தர வாழ்க்கையென முத்திரை குத்திய ஆண்டு
ஆரோக்கியமும் அகமகிழ்வும் அமைக்க ஆனந்தமாய் ஓடிவரும் ஆண்டு
ஆகாயமும் பூலோகமும் உழைக்கும் உழவர்களுக்கு உதவும் ஆண்டு
கடந்த காலத்தின் கஷ்டம் நஷ்டம் கவலைகளை மறந்து
கனிந்து வரும் புத்தாண்டை வரவேற்போம் உள்ளத்தில் மகிழ்ந்து
சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
குற்ற ஆவண பதிவேடு கூடம், தஞ்சாவூர்