தந்தையின் பாசம் தரணியில் பெரியது
தயந்து பேசிவிட்டால் கண்ணீருக்கு அளவேது
அம்மாவின் தாலாட்டில் வருவது அன்பு
அப்பாவின் பாசத்தில் மலர்வது பண்பு
அம்மாவின் கொஞ்சல் அப்பாவிடம் தோன்றாது
அதனால்தான் தந்தையிடம் பிள்ளைகள் அணுகாது
தேங்கிய பாசத்தை தாங்கிய சுமப்பார்
தேவையான நேரத்தில் கொஞ்சிட முயற்சிப்பார்
தாயின் அன்பு வானமே எல்லை
தந்தையின் பாசம் உலகமே எல்லை
அம்மா பிள்ளையுடன் அன்புடன் பேசுவார்
அப்பா மனதிற்குள் ஆனந்தத்தில் துள்ளுவார்
பாசத்தை கொட்டுவதற்கு சமயத்தை பார்ப்பார்
பாதையை காட்டியே பாசத்தை சுவாசிப்பார்
தாலாட்டும் சீராட்டும் தாய்க்கு சொந்தம்
தன்னலமற்ற தியாகமே தந்தையின் பந்தம்
பாசத்திலும் நேசத்திலும் வேஷமில்லா மனிதர்
பிள்ளைகளின் வாழ்க்கையை பாசமாக்கும் புனிதர்
சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
குற்ற ஆவண பதிவேடு கூடம், தஞ்சாவூர்