நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் வளையகார வீதி, திருநகர் காலனி, காவேரி ரோடு, காமராஜர் நகர், ராஜாஜிபுரம், கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் வீதி, இந்திராபுரம், ஆர்.என் புதூர், ஜவுளி நகர் மற்றும் ராயபாளையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 13 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் ஆக கண்டறியப்பட்டதை, 07-02-2022 ந் தேதியன்று கோயம்புத்தூர் சரக டிஐஜி முனைவர் எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள்
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வி.சசிமோகன், இ. கா. ப., அவர்களுடன் இணைந்து நேரடியாக ஆய்வு செய்து, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளை சேர்ந்த காவல் அதிகாரிகளுக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாவண்ணம் அலுவல் செய்து அமைதியான தேர்தலை நடத்தி முடிக்க தக்க அறிவுரைகள் வழங்கினார்.