16.02.2022 அன்று தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர்
திருமதி A.கயல்விழி IPS அவர்களின் உத்தரவின்பேரில்… தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயசந்திரன் அவர்களின் மேற்பார்வையில்… SI திரு.F.டேவிட் , SSIN.கந்தசாமி , SSI.S.கண்ணன் HC1888 K.இளையராஜா , Gri1281 K.சுந்தர்ராமன் Gri 1025 R.விஜய் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர்… தமக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அரசால் தடை செய்யபட்ட. கஞ்சா என்ற போதைப்பொருளை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஈச்சர் வண்டி மூலமாக தமிழ்நாட்டிற்கு கடத்தி வந்து தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூர் மாவட்டம் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 2 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்களை விசாரணை செய்ததில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாசத்திற்கும், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கும் கடத்தி வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நான்கு பேரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில் நாங்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் நாங்கள் கஞ்சா விற்பனை மொத்தமாக தமிழ்நாட்டிற்கு விற்பனை செய்து வருகிறோம் என்றும் நாங்கள் தற்போது தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஜாம்புவானோடை ராஜா என்பவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியை சேர்ந்த உமாமகேஸ்வரன் என்பவருக்கும், உசிலம்பட்டியை சேர்ந்த முத்துலிங்கம் என்பவருக்கு கும்பகோணத்திலும் கொடுக்க எடுத்து வந்தோம் என்று ஒத்துக்கொண்டனர். உடனடியாக தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களின் தனிப்படையினர் மூன்று குழுக்களாகப் பிரிந்து ஆந்திராவைச் சேர்ந்த சுகபெருமாள், சீனிவாசலு, கணபதி என்கிற கோவிந்தா, சோப்பா நாகராஜ் , பட்டுக்கோட்டை ஜாம்புவானோடை சேர்ந்த ராஜா, வீர கணேஷ், செந்தில், மேட்டூர் மேச்சேரி சேர்ந்த சக்திவேல், வெள்ளையன், தேனி கம்பத்தை சேர்ந்த. ரகுராம் ,மதுரை உசிலம்பட்டி சேர்ந்த முத்துலிங்கம் சென்னையை சேர்ந்த உமா மகேஸ்வரன் ,திருச்சியை சேர்ந்த முருகன், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகிய 14 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 2 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர் Eicher வண்டி அதனைப் பின் தொடர்ந்து வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட Ertica car , தமிழ்நாடு பதிவெண் கொண்ட மூன்று கார்கள் மற்றும் ஒரு டூவீலரை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக காவல்துறையில் முதன்முறையாக, ஆந்திர மாநிலம் விசாகபட்டினம்
பாடகிரி மலையிலிருந்து கஞ்சா கடத்துவதில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர் அதற்கு உதவி புரிந்த நபர்கள் தமிழ்நாடு வழியாக இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்த இருந்த நபர்கள் என கஞ்சா கடத்தலில் சம்மந்தப்பட்ட அனைத்து நபர்களையும் முதன்முறையாக கைது செய்துள்ளனர் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்த தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களின்
தனிபடையினருக்கு அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.