தூத்துக்குடி எஸ்.பி., ஜெயக்குமார், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி., ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில், சென்னை காவல்துறை துணை ஆணையராக பொறுப்பு வகித்து வந்த பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.
சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி., காமினி தாம்பரம் கூடுதல் போலீஸ் கமிஷனராகவும், அமலாக்கத்துறை ஐஜி ஆவடி கூடுதல் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.