முதலமைச்சர் மாநாட்டி லண்ணாவின் பேச்சை
நேருகேட்டு உளம் வியந்தார் டில்லி நகரிலே
சிங்கைபொதுக் கூட்டத்திலண் ணாபேச்சுக்கு
தலைமை ஏற்றப் பிரதமர்புகழ் மாலை சூட்டினார்
அன்னியரின் மொழிதானே ஆங்கில மென்றார்
அதுஅறிவுக் குயர்ந்தமொழியென் றண்ணாசொன்னார்
ஈரோட்டுப் பள்ளியில் சீராகப் பயின்றதால்
மாறாதக் கொள்கைகுன்றா அண்ணா திகழ்ந்தார்
தென்னவரின் ஆட்சிமத்தியி லென்று மலருமோ
செந்தமிழர் சுதந்திரமா வாழ்வதென் நாளோ
என்றண்ணா கனவெல்லாம் நினைவா க்கவே
அன்றிருந்தோர் மறந்துவிட்டார் பதவி மோகத்தால்
துஞ்சிக் கிடந்த தமிழகத்தில் முதல்வரு மானார்
தொடர்ந்தாராட்சி ஓராண்டுக் குளுலகை மறந்தார்
எஞ்சிருந்தக் கலைஞருக்கு இடமுங் கொடுத்தார்
இருவருமே சந்தனபே ழையில் சேர்ந்துரங்குறார்
பசுவிழந்த கன்றுபோலே பைந்தமிழ் மக்கள்
பறிதவிக்கும் நிலைமாறுமோ இருவரின் மறைவு
ஓடியோடி உழைத்தவர்கள் ஓய்வெடுக் கட்டும்
உழைக்கவந்த தலைமையினி அரசாளட்டும்
திரைக்கதைக ளிருவருக்கும் பெருமை சேர்த்தது
திக்கெல்லாம் இருவரினிசை இமயமானது
காஞ்சிதந்த அண்ணாஒரு காவிய மானார்
திருக்குவளை தந்தகலைஞர் ஓவிய மானார்
நெஞ்சிருக்கும் வரையவர்கள் நினைவு மிருக்கும்
நீள்நிலத்தில் இருவரின்புகழ் நிலைத்தே நிற்கும்
– சி.அடைக்கலம்
நெய்வேலி வடக்கு
பள்ளத்தான்மனை