தஞ்சாவூர் மாவட்டம் ஒட்டங்காடு ஊராட்சியில் உள்ள காலனி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன். இவர் பெயர் சொன்னாலே போதும் தரம் எளிதில் விளங்கும். லாட்டரி சீட்டு சில்லறை வியாபாரி. ஒட்டங்காட்டில் உள்ள முருகன் கோவில் மற்றும் ஐயப்பன் கோவில் அருகில் உள்ள கருவை முள் புதருக்குள் பாடி கிடப்பதாக தகவல் கிடைக்கப் பெற்று காவல்துறை மூலம் மருத்துவமனை அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. கயிர் மட்டும் கழுத்தில் உள்ளது. தூக்கு போட வழியே இல்லை. சுப்பிரமணியனுக்கு இரண்டு மனைவிகள். இதில் முதல் மனைவிக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டாவது மனைவியோடு தான் சுப்பிரமணியன் வாழ்ந்து வந்தார். இரண்டாவது மனைவிக்கும் பலருக்கும் தவறான பழக்கங்கள் இருந்துள்ளதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். சில சம்பவங்களும் குறிப்பிட்ட நாட்களில் நடந்ததாக கூறப்படுகின்றது.
எனவே இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஒட்டங்காடு பகுதி மக்களுக்கு அதிகமாக உள்ளது. நாட்கள் நகரநகர மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரண்டாவது மனைவி ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு திட்டம் (100 நாள் வேலை) மற்றும் ஊராட்சித்துறை ஒப்பந்தங்களில் தற்காலிக பணியாளராக பணியாற்றியதன் மூலம் ஆண்களுடன் பழகும் வட்டாரம் விரிவடைந்துள்ளது. இறந்து 1 வாரம் யாருக்கும் தெரியாமல் புதருக்குள் கிடந்த காலகட்டங்களில் சந்தேகப்படும்படியான சில சம்பவங்கள் நடந்துள்ளது. இரண்டாவது மனைவி ஒரு சிலரோடு பயணித்துள்ளார் என்ற பேச்சும் அதிகமாக மக்களிடத்தில் உள்ளது.
எனவே இது கொலையாக இருக்கலாம் என்ற மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப காவல்துறையும் பல கோணங்களில் விசாரணை வளையத்தை முடக்கியுள்ளது. விசாரணையில் தெரியும் கொலையா, தற்கொலையா, யார் யார் சிக்குவார்கள்.. என்பது ஒட்டங்காடு பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகவும், தற்போதைய பரபரப்பு பேச்சாகவும் உள்ளது.