திருச்சி மாவட்டம், 08.03.2022 சர்வதேச மகளிர் தினத்தன்று மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப , திருச்சி சரக காவல் துணை தலைவர் சரவண சுந்தர் இ.கா.ப மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் இ.கா.ப இணைந்து பெண்களை கௌரவிக்கும் விதமாகவும், பெண்கள் இவ்வுலகில் செய்த பல சாதனைகளைப் பற்றியும், பெண்கள் பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்பது குறித்தும், மேலும் பெண்களின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் மகளிர் தினத்தன்று திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்திற்குள் குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி, பெண் காவலர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பால்வண்ணநாதன், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் முகம்மது ரஃபிக், ஆயுதப்படை ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.