கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் கீழே கிடந்த 1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாட்டாத்திகோட்டை அருகே உள்ள இடையாத்தியில் குடியிருக்கும் தனலட்சுமி மதியழகன் தம்பதியினர் தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என பட்டுக்கோட்டை அரசு மருத்துவனைக்கு சென்றுள்ளனர். அப்போது ஒரு பையில் பணம் ஒரு கட்டு பையில் சுத்தி கீழே கிடந்து உள்ளது. அதை எடுத்துப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளனர்.
அவர்கள் யாரும் என்னுடைய பணம் இல்லை என்று சொன்னதால் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செங்கமல கண்ணனை தொடர்புகொண்டு இது சம்பந்தமாக தெரிவித்துள்ளார். அவரும் அவர்களை வரவழைத்து விசாரணை செய்து அந்த பணத்தை காவல்துறை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் வறுமையிலும் அடுத்தவன் பணத்தை எடுத்துச் செல்லக்கூடாது என்று உணர்த்திய இந்த தம்பதியனருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவிளிப்பிரியா பாராட்டி மாலை அந்த தம்பதிகளுக்கு நேர்மையை கெளரவ படுத்தி பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தி உள்ளார்.
மேலும் அடுத்தவன் பணத்தை எடுத்து செல்ல கூடாது என்று எடுத்துரைத்த இந்த தம்பதியினருக்கு மக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.