ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற திட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு உருவாக்கி உள்ளார். மேலும், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற திட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு உருவாக்கி உள்ளார். மேலும், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என அனைத்து ஐஜிக்கள், கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த டிசம்பர் 2021 ஜனவரி முதல் 2022 வரையில் கஞ்சா வேடை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வருகின்ற மாதம் 27ம் தேதி வரையில், ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 வேட்டை நடத்தப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரிகள் அருகில் குடியிருப்போரை வைத்து, அந்தந்த காவல் ஆயவாளர்கள் ஒரு வாட்சப் குழுவை ஏற்படுத்தி, ரகசிய தகவல் சேகரிக்க வேண்டும். நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்களுக்கு கஞ்சா, குட்கா குற்றவாளிகளை கண்காணிக்கும் பொறுப்புகளை அளிக்க வேண்டும்.
பார்சல் மூலம், போதை மாத்திரை விற்பனையை தடுக்க வேண்டும். ஆந்திராவில், கஞ்சா பயிரை ஒழிக்க, அம்மாநில போலீசார் உதவியை நாடவேண்டும். போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களை அதில் இருந்து மீட்டெடுக்க மன நல ஆலோகரிடம் அனுப்ப வேண்டும்.
சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தினமும் கண்காணித்து. மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். சென்னை, ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனர்கள் நேரடியாக இந்த பணியில் கவனம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.