புதிய தொடர் -1
காலை 10 மணி 20 நிமிடம். கமிஷனர் அலுவலகத்திற்குள் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய ஓட்டுநர் வேகவேகமாக நடந்து வரவேற்பறையில் வந்து நின்றார். வரவேற்பறையில் அவரைவிட பரபரப்பாக வேலைகள் நடந்துகொண்டிருந்தன. கமிஷனர் அலுவலகம் என்பதால் பொதுமக்கள், அதிகாரிகள் என கூட்டத்திற்கும் சத்தங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.
“சொல்லுங்க சார் என்ன விஷயம்” என்றார் வரவேற்பில் அமர்ந்திருந்த அதிகாரி.
“சார் என் பெயர் ஜான். நான் க்ஷ்1 ஸ்டேஷன் டிரைவர் என்னை 10 மணிக்கு கமிஷனர் ஆபீஸ் போக சொல்லி ஸ்டேஷன்ல சொன்னாங்க ஆனால் வரும் வழியில் ட்ராபிக்கில் சிக்கியதால் லேட்டாகி விட்டது” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கையில் கமிஷனர் வண்டி வந்து நின்றது.
கதவை திறந்து இறங்கிய கமிஷனர் நேராக படிக்கட்டு நோக்கி நடக்க தொடங்கினார். சற்றுமுன் வரை சத்தத்திற்கு பஞ்சமில்லாமல் இருந்த இடம் ஒரு நொடிக்குள் மாயாஜாலமாய் அமைதியில் ஆழ்ந்தது. கமிஷனரின் பூட்ஸ் மட்டுமே அந்த நேரத்தில் ஒலி எழுப்பும் அதிகாரம் பெற்றிருந்தது. ஒருவேளை கமிஷனர் வருவது ரேடியோக்களுக்கும் தெரிந்து இருந்ததோ என்னவோ அவைகளும் அமைதியாகவே இருந்தன.
அகன்ற தோள்கள் விரிந்த மார்பு என கட்டுடல் தோற்றமும் நேர் நிமிர்ந்த கம்பீரமான பார்வையும் நடையும், புன்சிரிப்புடன் சாந்தமான முகமும் பார்பவரின் மரியாதையை கேட்டு வாங்கி நம்பிக்கையை கேட்காமலே கொடுப்பது போல் கமிஷ்னர் என்ற பதவிக்கு கட்சிதமாகவே பொருந்தி இருந்தது. முதல் மாடியில் இருக்கும் அவருடைய அறையை அடைய வெறும் ஆறு நொடிகள் போதுமானது என்ற அளவில் இருந்தது அவருடைய நடையின் வேகம்.
(-தொடரும்…)