கடந்த 04.03.2022 அன்று திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த நகைக் கொள்ளை சம்பவத்தில் 3.75 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி, 15,00,000 லட்சம் ரொக்கம் என மொத்தம் ரூபாய் 1,76,78,750/- மதிப்பிலான நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு சம்பந்தமாக தீவிர புலன்விசாரனை செய்து, இரயிலில் தப்பி சென்ற பீகார் மாநில கொள்ளையர்களை ஓடும் ரயிலில் பிடித்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் 36 மணி நேரத்திற்குள் மீட்டெடுக்க காரணமாயிருந்த திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.விஜயகுமார், முதல் நிலைக்காவலர்கள் திரு. ரமேஷ்குமார், திரு. ராஜசேகர், இரண்டாம் நிலைக்காவலர்கள் திரு சபிக்ராஜா மற்றும் திரு. பிரபாகரன் ஆகிய தனிப்படையினரை 02.04.2022 அன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் நேரில் அழைத்து தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் காவல் படை தலைவர் முனைவர் திரு.சைலேந்திரபாபு, இ.கா.ப. அவர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கினார்கள். இந்த சிறப்புக் கூட்டத்தில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.ஏ.ஜி.பாபு, இ.கா.ப உட்பட காவல் உயர் அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.