கடந்த 16.12.2021 அன்று திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட அங்கேரிபாளையம் ரோடு அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கொங்கு நகர் சரக காவல் உதவி ஆணையர் திரு. வே. அனில்குமார் அனுப்பர்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ந. சென்னகேசவன், தலைமைகாவலர் திரு. சிவக்குமார், முதல் நிலைக்காவலர்கள் திரு.தங்கராஜ் மற்றும் திரு.பாஸ்கரன் ஆகியோர் சுமார் 350 கிலோ அளவுள்ள கஞ்சாவை காரில் கடத்தி வந்த தேனிமாவட்டத்தை சேர்ந்த பால்பாண்டி என்பவரை கைது செய்து கஞ்சாவை கைப்பற்றி சிறப்பாக பணியாற்றினர். அவர்களை 02.04.2022 அன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் நேரில் அழைத்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் காவல்படை தலைவர் முனைவர் திரு.சைலேந்திர பாபு, இ.கா.ப. அவர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கினார்கள். இந்த சிறப்புக் கூட்டத்தில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.ஏ.ஜி.பாபு இ.கா.ப. உட்பட காவல் உயர் அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.