புதுக்கோட்டை நகர உட்கோட்ட நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் கடந்த 05.03.2022 ஆம் தேதி இரவு சுமார் 11.00 மணியளவில் இரவு கன்னக்களவு திருடு போனது சம்மந்தமாக நகர காவல் நிலையத்தில் நகைகள் திருடு போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி இவ்வழக்கை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் திருச்சி மண்டல காவல் துறை தலைவர் V.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் அறிவுறித்தலின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் A.சரவண சுந்தர் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டலின்படி, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படியும் புதுக்கோட்டை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் லில்லிகிரேஸ் அவர்களின் நேரடி மேற்பார்வையில் புதுக்கோட்டை நகர காவல்நிலைய ஆய்வாளர் குருநாதன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கோவிந்தராஜன் மற்றும் தலைமை காவலர் 376, முதல்நிலை காவலர்கள் 849 பாவா, ராஜாராம் விவேக்ராஜா, காவலர்கள் 2019 ஸ்ரீகமல் 2064 ஜெகதீசன், 1795 மைக்கேல் அருண் விஜயராஜ், 2234 செல்வகுமார் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு தனி அலுவல் உதவி ஆய்வாளர்கள் மாரிமுத்து, காமராஜ் மற்றும் முதல்நிலை காவலர்கள் 107 கார்த்திகேயன், 577 சுந்தரராஜன், 1193 காளியப்பன், 476 சிவக்குமார், காவலர்கள் 2068 தூயவன், 1853 தமிழரசன், ஆயுதப்படை முதல்நிலை காவலர் 854 பிரபு ஆகியோர்கள் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இன்று 29.04.2022 -ஆம் தேதியன்று சிவராஜன், தங்கபாண்டி மற்றும் சதீஷ் @ ஸ்டீபன் ஆகிய கன்னக்களவு திருட்டு 3 குற்றவாளிகளை கைது செய்து களவு போன சொத்துக்களை கைப்பற்றியும், மேற்படி குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.