தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் திரு.சி.சைலேந்திரபாபு, இ.கா.ப மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப ஆகியோர் (17.05.2022) அன்று காலை புதுப்பேட்டை, ஆயுதப்படை வளாகத்தில் சென்னை பெருநகர காவல், காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநர் திரு.சைலேஷ்குமார் யாதவ், இ.கா.ப (நலன்), கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் திரு.J.லோகநாதன், இ.கா.ப, இணை ஆணையாளர்கள் திருமதி.சாமூண்டிஸ்வரி, இ.கா.ப, (தலைமையிடம்) திரு.S.பிரபாகரன், இ.கா.ப (கிழக்கு மண்டலம்), காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.