தமிழக அரசு உத்தரவின்படி, தாம்பரம் போலீஸ் கமிஷனராக அமல்ராஜ், வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக தேன்மொழி, கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனராக அவினாஷ்குமார், மத்திய மண்டல ஐஜியாக சந்தோஷ் குமார், காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப்படை ஐ.ஜி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், கரூர் எஸ்.பி.,யாக சுந்தரவதனம், மதுரை எஸ்.பி.,யாக சிவபிரசாத், திண்டுக்கல் எஸ்.பி.,யாக பாஸ்கரன், திருவாரூர், எஸ்.பி.,யாக சுரேஷ்குமார், திருவள்ளூர் எஸ்.பி.,யாக பகேர்லா செபாஸ் கல்யாண், திருவண்ணாமலை எஸ்.பி.,யாக கார்த்திகேயன், மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக வருண்குமார், ராமநாதபுரம் எஸ்.பி.,யாக தங்கதுரை ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக மகேஸ்வரி, போலீஸ் பயிற்சி அகடாமி கூடுதல் இயக்குநராக ஜெயகவுரி, சென்னை அண்ணா நகர் துணை கமிஷனராக சி.விஜயகுமார், சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக பவன்குமார் ரெட்டி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, தலைமையக எஸ்.பி.,யாக ஜெயச்சந்திரன், சென்னை, 3ஆவது மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக ஸ்டாலின், போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி.,யாக செல்வராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம், கடலோர பாதுகாப்பு குழுமம் எஸ்.பி.,யாக சுந்தரவடிவேல், திருநெல்வேலி கிழக்கு துணை கமிஷனராக ஸ்ரீனிவாசன், குற்றச்செயல் தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாக ஜெயந்தி, ஆவடி ஆணையரகம், ரெட்ஹில்ஸ் துணை கமிஷனராக மணிவண்ணன், வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு எஸ்.பி.,யாக சண்முகப்பிரியா, டெல்லியில் உள்ள தமிழக சிறப்பு போலீஸ் 8ஆவது பட்டாலியன் கமாண்டன்ட்டாக ஓம் பிரகாஷ் மீனா, மதுரை வடக்கு துணை கமிஷனராக மோகன்ராஜ் உள்ளிட்ட மொத்தம் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.