கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு செலவிடும் பணத்தில் நீர்நிலைகளை தூர்வாரலாமே என ஐகோர்ட் கிளை நீதிபதி யோசனை கூறியுள்ளார்.
பல்வேறு கிராமங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி ஏராளமான மனுக்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர்.தாரணி, கோயில் திருவிழாவிற்கும் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?. இதனால் என்ன பயன் ஏற்படப்போகிறது. இதற்காக செலவிடும் பணத்தில் அந்தந்த கிராமங்களில் உள்ள குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை தூர்வார செலவிடலாமே? எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்குமே. எனவே, இந்த மனுக்களுக்கு என்னால் அனுமதி வழங்க முடியாது’’ என்றார்.
இதையடுத்து பலர் தங்களது மனுக்களை திரும்ப பெறுவதாக கூறினர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, திரும்ப பெறப்பட்ட மனுக்களை தவிர்த்து மீதமுள்ள மனுக்கள் மீதான விசாரணையை தள்ளி வைத்தார்.