பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய சரகம் கரம்பயம். செம்பாளுர் எட்டுப்புலிக்காடு ஆலத்தூர் ஆலடிக்குமுளை வீரக்குறிச்சி பரங்கி வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த 4 மாத காலமாக தொடர்ந்து இரவு நேரங்களில் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களிடம் அரிவாளுடன் வீட்டினில் புகுந்து தாலி செயினை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து அறுத்து சென்றதும் இருசக்கர வாகனங்களை திருடி செல்வதும் பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து கொள்ளை அடித்துச் செல்வதும் பட்டுக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபரை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ரவளிபிரியா அவர்களின் உத்தரவின் பேரில்
பட்டுக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சுபாஷ் சந்திர போஸ் உத்தரவின் பெயரில் பட்டுக்கோட்டை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் திரு சந்திரசேகரன் மற்றும் காவலர்கள் அருண்குமார் இஸ்மாயில் தியாகராஜன் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
கடந்த இரண்டு வருடங்களாக பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை செய்து முக்கிய சிசிடிவி கேமராக்கள் பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளியின் புகைப்படத்தை எடுத்து தேடிவந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா செய்யாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழங் குற்றவாளி
பெரியசாமி என்பவரின் மகன் பழனி என்கிற பழனிஆண்டி வயது 70 என்பவர் மேற்கண்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேற்படி நபர் செல்போன் பயன்படுத்தவில்லை என்பதை தெரிந்து கொண்ட தனிப்படையினர் மேற்படி நபர் இருக்கும் இடம் குறித்து கடந்த இரண்டு மாதமாக தேடிவந்த நிலையில் ஒரத்தநாடு குலங்களத்தில் 35 வருடங்களாக தங்கியிருப்பது தெரியவரவே குலமங்களம் கிராமத்தில் மேற்படி குற்றவாளியை மாறுவேடத்தில் தேடிச் சென்றபோது அங்கிருந்து தப்பித்து சென்றுவிட ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே மேற்படி நபரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. 35 வருடங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை பகுதியில் வழிப்பறி செய்து 5 வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்றதும் இவர் மீது திருச்சிற்றம்பலம் திருவோணம் காவல் நிலையத்திலும், ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களிலும் பல்வேறு குற்ற வழக்குகளில் இருந்து தண்டனை பெற்றிருக்கிறார் என்பது தெரியவந்தது. மேலும் நகைகளை கொள்ளையடித்து ஒரத்தநாடு தாலுக்கா குலமங்கலம் கிராமத்தில் உள்ள சில நபர்களிடம் கொடுத்து வைத்திருப்பதாக அவர் சொன்ன தகவலின் பேரில் களவு போன நகைகள் கைப்பற்றப்பட்டது மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் பல்வேறு பகுதிகளில் பல வருடங்களாக திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியானது கடந்த ஏப்ரல் மாதம் ஒரே இரவில் நான்கு வீடுகளில் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் தாலி செயினை அறுத்து சென்றது அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு குற்றவாளியை பிடித்த தனிப்படையினர் உயரதிகாரிகள் பலர் பாராட்டினார்கள்.