தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி கூப்புளிக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பையன் இவரின் பெற்றோர்கள் நடேசன் -இராஜாமணி இவர்களுக்கு 2016ம் வருடம், ரூபாய் 3 லட்சம் செலவில் சொந்த இடத்தில் கோவில் கட்டி குரு பூஜை நடத்தினார். அதிலிருந்து வருடாவருடம் ஜூன் 26ம் தேதி விழா நடத்தி வருகின்றனர். நடேசன் இராஜாமணி தம்பதியருக்கு 5 ஆண்குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் என அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆண்டுதோறும் அன்னதானம் வழங்கி வழிப்பட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலேயே, பேராவூரணி பகுதியில் பெற்றோருக்கு ஆலயம் கட்டிவழிப்படுவது இப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்துவது என்பது குறிப்பிடதக்கது. அதிலும் ‘கருப்பையன் தன் தாய்க்காக கவிதை ஒன்றை பாடுவது தனிசிறப்பு.
- Dr. வேத குஞ்சருளன்