பிட்காயின் போன்ற தனியார் கிரிப்டோ கரன் சிகளை வாங்குவதன் மூலமாக அல்லது வாங்க விற்பதன் மூலமாக விரைவில் கோடீஸ்வர ஆகலாம் என்ற கருத்து சமீப காலமாக சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது. உண்மை என்னவென்றால், தனியார் கிரிப்டோ கரன் களை உருவாக்குபவர்கள் பெரும் கோடீஸ்வரகள் ஆகி விடுகிறார்கள். அதனை நம்பி முதலீடூ செய்யும் லட்சக்கணக்கானவர்கள் ஏமாற்ற படுகிறார்கள்.
கேரளாவில் தாமஸ் என்பவர், ‘மோரி காயின் கிரிப்டோகரன்சி’ என்ற பெயரி பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக சொன்ன ஒரு கும்பலிடம் தனது வாழ்நாள் சேமிப்பை எல்லாம் இழந்துவிட்டார். அவரைப்போல் 900 போரிடம் ரூ.1,265 கோடி மோசடி செய்துள்ளது அந்த கும்பல்.
இந்திய மென் பொறியாளர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கெய்ன் பிட்காயின் என்ற கிரிப்டோ கரன்சி யில் முதலீடு செய்த பல்லாயிரம் பேர் ஏமாற் றப்பட்டனர். இந்தியா வில் மட்டும் 33 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டன.
GainBitcoin’, ‘Bitconnect’, ‘Morris Coin’, ‘Ether Trade Asia’ உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி மோசடிகளில் இந்தியாவில் மட்டும் ரூ.72,000 கோடிக்கும் அதிகமான பண ஏமாற்றப்பட்டுள்ளதாக புகார்கள் பதிவாகியுள்ளன.
ஆசியாவில் பிட்காயின் பயன்படுத்தும் 2-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. ஆசியாவில் சீனா முதலாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் அமெரிக்கா, நைஜீரியா, சீனா, கனடா, பிரிட்டனுக்கு அடுத்த 6-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. பிட்காயின் போன்ற தனியார் கிரிப்டோகரன் சிகள் அனைத்தும் மாயை என்று பல பொருளா தார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இருப்பினும் உலகின் ‘நம்பர்- ஒன்’ பணக்காரரான எலான் மஸ்க் போன்ற சிலர் பிட்காயினில் முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்கள். பெரும் கோடீஸ்வரர்களை பொறுத்தவரை பல்லாயிரம் கோடி இழப்புகளைக்கூட தாங்கிக்கொள்ள முடியும். பெரும் கோடீஸ்வரர்களை காப்பி யடித்து, ஏழை, நடுத்தர மக்கள் கையை சுட்டுக் கொள்ளவேண்டாம். பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் முன்னு தாரணமாக கருதப்படும் வாரன் பபெட், ‘உலகில்உள்ள அனைத்து பிட் காயினையும் சேர்த்து ஒரு விலைக்குக் கொடுத்தாலும்கூட நான் அதை வாங்க மாட்டேன். முதலீட்டில் லாபம் பார்ப்பது எப்படி முக்கியமோ, அதை விட முக்கியம் மோச டிகளில் ஏமாறாமல் இருப்பது’ என்று ஒரு முதலீட்டாளர்கள் கூட் டத்தில் பேசிய கருத்து நாம் அனைவரும் நினைவு கூரத்தக்கது.
முழுக்க. முழுக்க “ஆன்லைன்’ கரன்சியாக இருப்பதால் “சைபர் கிரிமினல்கள் கிரிப்டோ கரன்சிகளை தவறாக பயன்படுத்தி எளிதாக மோசடி செய்கிறார்கள். அதனால் தான் இந்தியாவில் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் செய்ய தடை விதித்து 2018 ஏப்ரல் 16-ல் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளி யிட்டது. எனினும், சுப்ரீம் கோர்ட்டு 2020-ம் ஆண்டு மார்ச் 4-ந்தேதி அந்த தடையை விலக்கி, மீண்டும் கிரிப்டோ கரன்சிகளுக்கு அனுமதி அளித்தது. கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஒருவர் ஈடுபட்டால் அந்த லாபத்தில் 30 சதவீதம் வரி கட்டவேண்டும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
2023 தொடக்கத்தில் இந்திய அரசே ‘டிஜிட்டல் ருபி’ என்ற பெயருடன் டிஜிட்டல் கரன்சியை வெளியிடும் என்றும், அதன்பின் தனியார் கிரிப்டோகரன்சிகள் அனைத்தும் இந்தியாவில் மீண்டும் தடைசெய்யப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்திய அரசு, டிஜிட்டல் கரன்சியை உருவாக்கி வெளியிடும் போது அது 100 சதவீதம் பாதுகாப்பான தாக இருக்கும். அவ்வாறன்றி, தனியார் கிரிப்டோ கரன்சிகள் பெயரில் வெளியாகும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.