புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் சரகம், வடக்கு ரதவீதியில் வசித்து வரும் பழனியாண்டி பிள்ளையின் மகன் சந்திரசேகரன் (67) என்பவர் CRK டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 02.07.2022 – ஆம் தேதியன்று காலை 05.05 மணிக்கு சந்திரசேகரன் கீரனூர் to குண்றாண்டார் கோவில் ரோட்டில் நாஞ்சுர் விளக்கு பிரிவு ரோடு அருகே நடைப்பயிற்சி சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் வெள்ளை நிற Scorpio காரில் கடத்திவிட்டதாக அவரது மகன் மணிகண்டன் என்பவர் கீரனூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில், தொழில் அதிபர் சந்திரசேகரனை கடத்திய நபர்கள் புகார்தாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு ரூ.70 லட்சம் பணம் கேட்டதன் அடிப்படையில், எதிரிகளை தேடிச் சென்றதில் சூரியூர் அருகே கடத்தப்பட்டவரை எதிரிகள் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
மேற்படி கடத்தப்பட்டவர் நல்ல நிலையில் மீட்கப்பட்டு, தப்பியோடிய 7 எதிரிகளை 6 மணி நேரத்திற்குள் துரிதமாக கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கின் எதிரிகளை துரித நடவடிக்கை மூலம் கைது செய்த தனிப்படையைச் சேர்ந்த கீரனூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.சிவசுப்பிரமணியன் அவர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோரை 04.07.2022 ஆம் தேதியன்று திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் இ.கா.ப., அவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப.,அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து நற்சான்றிதழ் வழங்கி வெகுவாக பாராட்டினார்கள்.